நவீன எரிவாயு தகனமேடை திறப்பு ‌எப்போது ?

உத்திரமேரூரில் மூலதன மான்ய நிதி திட்டத்தின் மூலம் நவீன எரிவாயு தகன மேடை பணிகள் நிறைவடைந்ததும், இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.

Update: 2023-12-16 11:06 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பேரூராட்சியில் இறந்தவர்களின் சடலங்களை எரிப்பதற்காக நவீன எரிவாயு தகன மேடை மூலதன மான்ய நிதி திட்டத்தின் மூலம் 2021-2022ம் ஆண்டு ரூபாய் 1கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த நவீன எரிவாயு தகன மேடை பணிகள் நிறைவடைந்ததும் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. அதனால், இறந்தவர்களின் சடலங்களை பழையபடியே மரக்கட்டை, வரட்டி உள்ளிட்டவைகளை கொண்டு எரிந்து வருகின்றனர்.

மேலும், சடலங்களை மரக்கட்டை மற்றும் வரட்டி கொண்டு எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு அடைவதுடன் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, உத்திரமேரூர் பேரூராட்சியில் திறக்கப்படாமல் உள்ள நவீன ஏரிவாயு தகன மேடையை பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News