சிறுத்தை எங்கே ? 3 மாவட்ட வனத்துறையினர் தேடுதல் வேட்டை

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் தென்படாத நிலையில் திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

Update: 2024-04-10 07:41 GMT

கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர்

 மயிலாடுதுறை நகரில் கடந்த இரண்டாம் தேதி முதல் திரிந்து வந்த சிறுத்தை, கடந்த இரண்டு நாட்களாக குத்தாலம் தாலுக்கா காஞ்சிவாய், பேராவூர், கருப்பூர் பகுதிகளில் சுற்றி வந்த நிலையில், காஞ்சிவாய் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் இன்று காலை ஆய்வு செய்தனர். மேலும் சிறுத்தை பிடிப்பதற்காக வைக்கப்பட்ட கூண்டுகளிலும் ஆய்வு செய்தனர்.

இதில் சிறுத்தை நடமாட்டம் குறித்து எந்த தகவலும் பதிவாகவில்லை. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து எந்த தகவலும் பதிவாகவில்லை என நாகப்பட்டினம் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அருகாமையில் உள்ள மாவட்டங்களான தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கும் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News