கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் யார்?

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடுவது யார் என்ற சஸ்பென்ஸ் முதன்முதலாக ஏற்பட்டுள்ளது .

Update: 2024-03-20 02:58 GMT

 பொன் ராதாகிருஷ்ணன், விஜயதாரணி 

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் உள்ள குமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா சார்பில் கடந்த காலங்களில் பாராளுமன்ற தேர்தலில் தொடர்ந்து போட்டியிட்டு வருபவர் முன்னாள் மத்திய அமைச்சராகவும் பதவி வைத்த பொன் ராதாகிருஷ்ணன் ஆவார்.  இந்த முறையும் அவரே இந்த தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடுவார் என்று அறிவிப்பு வெளியானது.      

இதற்கு இடையில் பொன் ராதாகிருஷ்ணனின் வயதை காரணம் காட்டி, கட்சியில் அறிமுகம் இல்லாத, எந்தவித அனுபவம் இல்லாதவர்களும் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடுவதாக சமூக வலைத்தளங்கள் வாயிலாக தகவல்கள் பரப்பி வந்தனர்.      இதற்கிடையில் காங்கிரசில் இருந்து பாரதிய ஜனதாவில் இணைந்த  விஜயதரணி வேட்பாளர் என ஸ்கிரீன்ஷாட் பதிவுகள் பரவியது.      இந்த வேட்பாளர் பட்டியல் போலி என்ற முத்திரையுடன் மீண்டும் பதிவுகள் வந்தன. இதனால் கடந்த சில நாட்களாக கன்னியாகுமரியில் பாரதிய ஜனதா சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்ப்பு கட்சியில் மூத்த நிர்வாகிகள் முதல் கடை நிலை தொண்டர்கள் வரை ஏற்பட்டுள்ளது.       

இதற்கு இடையே பொன். ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் வழக்கம்போல் தங்கள் பணியை அமைதியாக மேற்கொண்டுள்ளனர். இது பற்றி பாரதிய ஜனதா முக்கிய நிர்வாகிகள் கூறுகையில் யார் வேட்பாளர் என்பது கட்சியின் தேசிய தலைமை மட்டுமே முடிவு செய்து அறிவிக்கும். அதுவரை யாருக்கும் யார் வேட்பாளர் என்று தெரியாது. இன்று 20ஆம் தேதி வேட்பாளர் பட்டியலை தேசிய தலைமை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறினார்கள்.

Tags:    

Similar News

Test