மதுப்பழக்கம் கணவரால் மனைவி தற்கொலை
கள்ளக்குறிச்சி மாவட்டம், கொடுக்கப்பட்டு கிராமத்தை சேர்ந்த பெண் கணவனின் குடிபழக்கத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-01-07 09:24 GMT
மனைவி தற்கொலை
அரகண்டநல்லுார் அடுத்த கொடுக்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் லாரன்ஸ் மனைவி வேளாங்கண்ணி ஜெசிந்தாமேரி, 30; இவர்களுக்கு கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்தது. இரண்டு பிள்ளைகள் உள்ளனர். குடிப்பழக்கம் உடைய லாரன்ஸ் குடித்து விட்டு, மனைவியிடம் மேலும், பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதனால், மனமுடைந்த வேளாங்கண்ணி ஜெசிந்தாமேரி நேற்று முன்தினம் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.