குடும்பம் நடத்த மறுப்பதாக மனைவி புகார் - கணவர் கைது
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் திருமணம் செய்து விட்டு குடும்பம் நடத்த மறுப்பதாக மனைவி புகார்.கணவரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
Update: 2024-06-15 04:59 GMT
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த வந்தலை கூடலூரைச் சேர்ந்தவர் 25 வயதான பெண். இவர் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் வசிக்கும் சோலைராஜன் மகன் பிரவீன் என்பவருடன் கடந்த 2017 ஆம் முதல் 2023ம் ஆண்டு வரை கல்லூரி படிக்கும் பொழுது இருவரும் காதலித்து வந்துள்ளனர் .பிறகு 2023 ஆண்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த பெண்னை பிரவீன் முக்கொம்பு உள்பட பல சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் சென்று தனிமையில் இருந்துள்ளார். பிறகு கல்லூரி படிப்பு முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி அந்த பெண்ணை பிரவின் சமாதானப்படுத்தியுள்ளார். பிறகு கல்லூரி படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார் அந்த பெண். அதற்கு பிரவீன் நீ பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறி தகாத வார்தையில் திட்டியதன் பேரில் பாதிக்கப்பட்ட பெண் திருச்சி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார் . புகாரின் பேரில் லால்குடி அனைத்து மகளிர் காவல் துறையினர் அறிவுறுத்தலின் பேரில் கடந்த மார்ச் 28ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது . திருமணம் முடிந்து 10 நாட்களில் வீடு வாடகைக்கு எடுத்து அழைத்துச் செல்வதாக கூறி விட்டுச் சென்ற பிரவீன் ஜூன் 11ஆம் தேதி வரை வரவில்லை பிறகு மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளரிடம் என்னை திருமணம் செய்து ஏமாற்றி தப்பிச் சென்று விட்டார் என பிரவீன் மீது மீண்டும் புகார் அளித்ததின் பேரில் பிரவினை லால்குடி மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.