நடத்தையில் சந்தேகப்பட்டு கத்தியால் குத்தியதில் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

திருப்பூர் துளசிராவ் வீதியைச் சேர்ந்த ராமமூர்த்தி தனது மனைவி சத்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு கத்தியால் குத்தியதில் அவரது மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதனைத் தொடர்ந்து ராமமூர்த்தி மீது காவல்துறையினர் பதிவு செய்திருந்த கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;

Update: 2024-06-13 06:22 GMT

திருப்பூர் துளசிராவ் வீதியைச் சேர்ந்த ராமமூர்த்தி ( 42 ). அவரது மனைவி சத்யா ( 36 ). இவர்களுக்கு திருமணம் ஆகி 12 வருடங்களான நிலையில் 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சத்யா அருகிலுள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சத்யாவின் நடத்தையில் ராமமூர்த்தி சந்தேகம் அடைந்து வந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராமமூர்த்தி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சத்யாவின் கழுத்து , வயிறு மற்றும் மார்பு உள்ளிட்ட பகுதிகளில் குத்தியுள்ளார்.

Advertisement

ரத்த வெள்ளத்தில் சத்யா சரிந்து விழுந்துள்ளார். ராமமூர்த்தி ரத்த கரையுடன் திருப்பூர் தெற்கு காவல் நிலையம் வந்து நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். உடனடியாக காவல்துறையினர் துளசிராவ் வீதியில் உள்ள ராமமூர்த்தியின் இல்லத்திற்கு சென்ற போது அருகில் இருந்தவர்கள் உதவியுடன் சத்யா 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சத்யாஉயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ராமமூர்த்தி மீது காவல்துறையினர் பதிவு செய்திருந்த கொலை முயற்சி வழக்கு கொலை வழக்கமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News