மனைவிக்கு கொலை மிரட்டல் - கணவர் கைது

சாம்பவர் வடகரை அருகே மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்து வீட்டு கூரையில் தீ வைத்த கணவனை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-04-18 04:20 GMT

கைது 

தென்காசி அருகே உள்ள சாம்பவர் வடகரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எம். சி. பொய்கை பகுதியில் வசித்து வருபவர் அர்ச்சுனன் என்பவரது மகன் நடேசன் பால்ராஜ் ( வயது 33) . இவர் தினமும் குடித்துவிட்டு அவரது மனைவி முத்துலெட்சுமியிடம் பிரச்சனை செய்து வந்துள்ளார். இது குறித்து முத்துலட்சுமி தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மனு ரசீது பதிவு செய்யப்பட்டு நடேசன் பால்ராஜை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

Advertisement

அதன் பின்னர் முத்துலட்சுமி தனது குழந்தைகளுடன் தாயாரின் வீட்டிற்கு சென்று விட்ட நிலையில் அங்கு சென்ற நடேசன் பால்ராஜ் முத்து லட்சுமியை அசிங்கமாக பேசி அவரை தாக்கி கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்து, வீட்டின் வெளியே இருந்த ஓலையில் தீ வைத்துள்ளார். இதுகுறித்து முத்துலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் சதீஷ் விசாரணை மேற்கொண்டு நடேசன் பால்ராஜ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார்.

Tags:    

Similar News