இரவு நேரத்தில் படையெடுக்கும் காட்டு யானை : பொதுமக்கள் விவசாயிகள் அச்சம்

இரவு நேரத்தில் கிராம பகுதிகளுக்குள் படையெடுக்கும் ஒற்றை காட்டு யானை : பொதுமக்கள் விவசாயிகள் அச்சம்

Update: 2023-12-15 04:04 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
இரவு நேரத்தில் கிராம பகுதிகளுக்குள் படையெடுக்கும் ஒற்றை காட்டு யானை : பொதுமக்கள் விவசாயிகள் அச்சம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள நொகனூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிகின்றன. இந்த காட்டு யானைகள் கூட்டத்தில் பிரிந்து ஒற்றை காட்டு யானை உணவு தேடி இரவு நேரத்தில் அருகில் உள்ள ஆலள்ளி, முனுவனப்பள்ளி, அந்தேவனப்பள்ளி, ஒட்டர்பாளையம், மணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் புகுந்து அங்கு விவசாயிகள் பயிரிட்டுள்ள ராகி, தக்காளி, முட்டைகோஸ், மாமரங்கள் உள்ளிட்ட விளை பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. காட்டுப்பகுதியில் இருந்து தினந்தோறும் இந்த ஒற்றை காட்டு யானை கிராமப் பகுதிகளுக்குள் சென்று அட்டகாசம் செய்து வருவதால் அப்பகுதி கிராம பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். விவசாயிகள் பயிரிட்டுள்ள விளை பயிர்களும் தொடர்ந்து சேதமாகி வருவதால் விவசாயிகளும் வேதனை அடைந்துள்ளனர். எனவே இந்த ஒற்றை காட்டு யானையை அடர்ந்த தளி, ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News