காலிபிளவர் பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் : பட்டாசுகள் வெடித்து விரட்டிய வனத்துறை
தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் காலிபிளவர் பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகளை பட்டாசுகள் வெடித்து விரட்டிய வனத்துறை
Update: 2024-02-25 10:39 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 11க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் இந்த காட்டு யானைகள் அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்து வருகின்றன. இந்த நிலையில் இந்த 11 காட்டு யானைகளும் தேன்கனிக்கோட்டையில் இருந்து பஞ்சப்பள்ளி சாலையில் உள்ள பேட்டராய சுவாமி கோவில் அருகே குணசேகர் என்பவரது நிலத்திற்குள் புகுந்து அவர் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த காலிபிளவர் பயிர்களை சேதப்படுத்தி சென்றுள்ளன. இதனால் அவர் வேதனையடைந்துள்ளார். சேதமான பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் காட்டு யானைகளை அடர்ந்த காட்டுப் பகுதிக்கு விரட்ட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை எடுத்து வனத்துறையினர் காட்டு யானைகளை பட்டாசுகள் வெடித்து வேறு வனப்பகுதிக்கு விரட்டும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த காட்டு யானைகளால் அப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளர்.