உதயநிதியின் கருணை பார்வையற்ற மாற்றுத்திறனாளிப்பக்கம் திரும்புமா?

நடிகர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை தந்த உதயநிதியின் கருணை பார்வையற்ற மாற்றுத்திறனாளிப்பக்கம் திரும்புமா? தமாகா யுவராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்;

Update: 2024-02-16 11:38 GMT

யுவராஜ்

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு அச்சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கினர்.

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இளைஞர் அணித்தலைவர் யுவராஜா , நடிகர் விஜயின் அரசியல் அறிவிப்பிற்கு பிறகு நடிகர் சங்க கட்டிடத்திற்கு நன்கொடை தர முன்வந்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். சென்னையில் கடந்த மூன்று நாட்களாக பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு வேண்டும் என போராடி வருகின்றனர். 

Advertisement

இதற்கெல்லாம் ஏன் உதயநிதி ஸ்டாலின் மனம் உருகவில்லை? காவிரி நீர் வராததால் 3 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் தஞ்சை தரணியில் காய்ந்துள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க  ஏன் உதயநிதி ஸ்டாலின்  முன்வரவில்லை? நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதி வழங்குவது தவறில்லை.

ஆனால் அதே சமயத்தில் . கிராமப்புறங்களில் ஏராளமான இளைஞர்கள் போதிய வாய்ப்பின்றி விளையாட்டுகளில்  பிரகாசிக்க முடியாமல் உள்ளனர் அவர்களை கண்டறிந்து உதயநிதி ஸ்டாலின்  உரிய வாய்ப்பு  வழங்க ஏன் முன்வரவில்லை? என கேள்வி எழுப்பினர்

Tags:    

Similar News