கம்பி பதிக்கும் பணிகள் தாமதம்
மானாமதுரையில் கம்பி பதிக்கும் பணிகள் தாமதமாக நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பைபாஸ் ரோடு 4 வழிச்சாலை பகுதிகளில் உள்ள சர்வீஸ் ரோடுகளின் ஓரங்களில் ரயில்வே நிர்வாகத்திற்காக மின் கம்பிகள் பதிக்கும் பணி மந்தகதியில் நடப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மதுரை, காரைக்குடி, விருதுநகர், ராமேஸ்வரம் ஆகிய 4 ரயில் தண்டவாள பாதைகளிலும் மின்மயமாக்கம் செய்யப்பட்டு பயணிகள் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகளுக்கு தேவைப்படும் மின்சாரம் மானாமதுரை சிப்காட் பகுதியிலிருந்து மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு கொண்டு வரும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மானாமதுரை வைகை ஆற்றை கடந்து மானாமதுரை பைபாஸ் ரோடு மற்றும் 4 வழி சாலை சர்வீஸ் ரோடு வழியாக ரயில்வே ஸ்டேஷனுக்கு மின் கம்பிகள் தரைக்கு அடியில் பதித்து கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இப்பணிகள் மந்த கதியில் நடப்பதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாவதாக புகார் தெரிவித்துள்ளனர்