ஆத்தூரில் கொடிகம்பம் அகற்றிய அதிகாரிகளுடன் பாஜகவினர் வாக்குவாதம்

ஆத்தூரில் கட்சி கொடி கம்பங்களை அகற்ற சென்ற அதிகாரிகளிடம் பாஜக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-03-17 13:31 GMT

வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினர்

சேலம் மாவட்டம் ஆத்தூர் சாரதா ரவுண்டானா பகுதியில் அனைத்துக் கட்சி சார்பில் 10க்கும் மேற்பட்ட கொடி கம்பங்கள் உள்ளன.தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் அதனை அகற்ற சம்பந்தப்பட்ட கட்சியினருக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நகராட்சி வாகனத்தில் அதிகாரிகள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கொடிக்கம்பங்களை அகற்றி ஏற்றினார். இது குறித்த தகவல் அறிந்து வந்த பாஜக நிர்வாகிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போதே ஆத்தூர் நகர பாஜக நிர்வாகிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News