கணவர் கல்லறையில் பெண் தற்கொலை 

வெள்ளிச்சந்தை அருகே கணவரின் கல்லறையில் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-03-04 04:12 GMT

பைல் படம்

குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள வெள்ள மோடியை சேர்ந்த நடராஜன் மனைவி கனகா பாய் (57).  நடராஜன் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார். இதன் பின்பு கனக பாய் தனது மகனுடன் வசித்து வந்தார். மேலும் இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.    

  இதனால் மனமுடைந்தவர் நேற்று முன்தினம்  கணவரின் கல்லறையில்  சென்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.        அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று  அவர் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

Tags:    

Similar News