பெண் தீக்குளித்து தற்கொலை - உறவினர் கைது
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது உறவுக்கார பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.;
Update: 2024-04-03 01:10 GMT
தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கோவில் விளை தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் மனைவி காளீஸ்வரி (33). இவர்களது பக்கத்து வீட்டில் வேல்முருகனின் தம்பி ராமர் வசித்து வருகிறார். ராமர் மனைவி தனலட்சுமி (31) என்பவருக்கும் காளீஸ்வரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த 31ம் தேதி ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த காளீஸ்வரி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதையடுத்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து திருச்செந்தூர் தாலூகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வழக்குப் பதிந்து தனலட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.