குடும்பப் பிரச்சினையில் பெண் தூக்கிட்டு தற்கொலை

காங்கேயத்தில் குடும்பப் பிரச்சினை காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-05-27 01:42 GMT

பைல் படம் 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுக்காவை சேர்ந்தவர் பழனிச்சாமி வயது 59. இவரது மகள் சினேகா வயது 21. இவருக்கும் காங்கேயம் திருப்பூர் சாலையை சேர்ந்த மேகராஜ் என்பவருக்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் கடந்த 3 வருடங்களாக இருவருக்கும்  குழந்தைகள் இல்லை என கூறப்படுகிறது. மேலும் இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்படுவதாகவும், அதனால் சினேகா கோவித்துக் கொண்டு அவரது அம்மா வீட்டிற்கு சென்றுவிடுவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

 இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கிடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் மேகராஜ் வீட்டிலிருந்து வெளியே சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த சினேகா வீட்டின் உள்பக்க அறையில் மேற்கூறையில் தூக்கிட்டு கொண்டுள்ளார். பின்னர் வீடு திரும்பிய மேகராஜ் வீட்டின் கதவை தட்டிய போது எந்தவொரு பதிலும் இல்லாததால் பயந்த போன மேகராஜ்  அவரது உறவினருடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சினேகா தூக்கில்  தொங்கிக் கொண்டிருந்ததை  கண்டு  அதிர்ச்சி அடைந்துள்ளார். 

பின்னர் கீழே இறக்கி பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த மனைவியை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு  பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளர். இதனை அடுத்து காங்கேயம் போலிசார் இந்த தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News