காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை

கன்னியாகுமரி அருகே கணவன் மதுவிற்கு அடிமையானதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-01-31 04:41 GMT
இளம்பெண் தற்கொலை 

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே உள்ள அழகியமண்டபம் காட்டு விளை பகுதியை சேர்ந்தவர் மணி (45) சோபா செட் தயார் செய்யும் தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஜெரினா பேகம் (44) என்பவரை கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளார்.      

தற்போது இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மணிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக தெரிகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு எப்போது வழக்கம். இந்த நிலையில் சம்பவ தினம் கணவரிடம் மனைவி தனக்கு வயிற்று வலி உள்ளதாக கூறியுள்ளார்.

Advertisement

இதை பொருட்படுத்தாத மணி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த ஜரீனா பேகம் வீட்டில் உள்ள குளியறையில் சென்று தீக்குளித்துள்ளார். அவர் அலறல் சத்தத்தை கேட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.     அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

சிகிச்சை பலனின்றி நேற்று ஜெரினா இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News