திமுக சார்பில் மகளிர் தின விழா
நாமக்கல் மாவட்டம்,பள்ளிபாளையம் நகர திமுகவினர் சார்பில் உலகம் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.;
Update: 2024-03-08 13:45 GMT
மகளிர் தின கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகர திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக, மகளிர் தின விழா நடைபெற்றது. நகர கழக செயலாளர் அ.குமார் தலைமை தாங்கினார். நகர மன்ற துணைத் தலைவர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். நகர அவை தலைவர் குலோப்ஜான் வரவேற்பு ஆற்றினார் . பள்ளிபாளையம் நகர திமுக மகளிர் அணி சார்ந்த சகோதரிகளுக்கு சால்வை அணிவித்தும் ,இனிப்பு வழங்கியும் மகளிர் தின விழா வாழ்த்து தெரிவிக்கபட்டது. நிர்வாகிகள் நகர மன்ற உறுப்பினர்கள், மாவட்ட சார்பணி துணை அமைப்பாளர்கள், வார்டுகளை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.