இருசக்கர வாகன விபத்தில் பெண் உயிரிழப்பு
கிருஷ்ணாபுரம் ராயம்பட்டி - கல்லிப்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;
Update: 2024-03-18 06:08 GMT
காவல் நிலையம்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி காரிமங்கலம் அருகேயுள்ள பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் மனைவி சாந்தா இவர் நேற்று உறவினர் திலீபன் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் பெரியாம்பட்டியில் இருந்து அரியாகுளத்திற்கு புறப்பட்டார். அப்போது கிருஷ்ணாபுரம் ராயம்பட்டி - கல்லிப்பட்டி சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி இரு சக்கர வாகனத்தில் கீழே விழுந்து சாந்தா பலத்த காயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிகிச்சை பெற்ற வந்த அவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணாபு ரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.