திருச்சி: பெண் மாயம் - காவல்துறை விசாரணை

திருச்சி மாவட்டம், சிறுமருதூரில் மாயமான பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Update: 2024-03-07 05:39 GMT

இளம்பெண் மாயம் 

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே சிறுமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதான இளம்பெண்.இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் காட்டன் மில்லில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 25 ம் தேதி விடுமுறை எடுத்துவிட்டு தனது சொந்த ஊரான சிறுமருதூருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டிலிருந்து வெளியே சென்ற இளம்பெண் திடீரென மாயமானார். அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் இளம்பெண் கிடைக்கவில்லை. இது குறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் நேற்று அவரது தாயார் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் மாயமான இளம்பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News