முசிறியில் அழுகிய நிலையில் பெண் சடலமாக மீட்பு
திருச்சி மாவட்டம், முசிறியில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த மூதாட்டி சடலத்தை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-02-23 03:21 GMT
அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு
முசிறி கடைவீதி பகுதியில் உள்ள ஜெகந்நாதன் மனைவி விஜயலட்சுமி (60). இவா், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக முசிறியில் தனியாக வசித்துவந்தாா். இந்நிலையில், அவரது வீட்டின் பின்புறம் வியாழக்கிழமை அழுகிய நிலையில் இருந்து கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதைத்தொடா்ந்து, அங்கு சென்ற போலீஸாா் பெண்ணின் சடலத்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக சென்னையில் உள்ள விஜயலட்சுமியின் கணவா் ஜெகநாதனுக்கு முசிறி போலீஸாா் தகவல் அளித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.