மதுபாட்டில்கள் விற்ற பெண் கைது
கடலூர் மாவட்டம், கோபாலபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.;
Update: 2024-03-03 06:06 GMT
மதுவிற்ற பெண் கைது
கடலூர் மாவட்டம், கம்மாபுரம் அடுத்த கோபாலபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த தெய்வசிகாமணி மனைவி விஜயலட்சுமி வயது 45 என்பவர் வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்து மதுபாட்டில் விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிந்து விஜயலட்சுமியை கைது செய்தனர். அவரிடம் இருந்த மது பாட்டிலை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.