டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பெண்கள்
டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
By : King 24x7 Website
Update: 2023-10-30 08:16 GMT

டாஸ்மாக் கடை முற்றுகை
அரகண்டநல்லுார் அடுத்த ஆற்காடு கிராமத்தில், வீரமடை செல்லும் சாலையில், டாஸ்மாக் கடை உள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் குடிபிரியர்களால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படுவதாக கூறி பாக்கியலட்சுமி தலைமையில் 20க் கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடை முன்பாக அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் கடையை மாற்றுவதாக உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.