ஆரணி ஜவுளிகடையில் குழந்தை கால் கொலுசு திருடிய பெண் சிக்கினார்
ஆரணி ஜவுளிகடையில் குழந்தை கால் கொலுசு திருடிய பெண் கையும் களவுமாக சிக்கினார். அவரை ஆரணி காவல் துறை விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.;
Update: 2024-02-06 03:45 GMT
பைல் படம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி முனுசாமி செட்டி தெருவில் உள்ள ஜவுளி கடையில் ஆரணி அடுத்த வெள்ளேரி கிராமத்தை சேர்ந்த ராதிகா என்பவர் அவருடைய 6 மாத கைக் குழந்தையுடன் துணி எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது காவேரிப்பாக்கம் தாலுகா, அத்திபட்டு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி அம்சவேணி என்பவர் ராதிகாவின் குழந்தை காலில் இருந்த வெள்ளி கொலுசை திருடும்பொழுது கையும் களவுமாக பிடிபட்டார்.
பின்பு அம்சவேணியை ஆரணி நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.மேலும் ஆரணி நகர உதவி காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி விசாரணை செய்தபோது கிருஷ்ணன் மனைவி அம்சவேணி(37) என்பவர் குழந்தை கால் கொலுசு திருடியது தெரியவந்தது. இவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்