பணம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் மறியல்
Update: 2023-12-06 07:52 GMT
மறியலில் ஈடுபட்ட பெண்கள்
சேலம் மணியனூர் பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர், பணம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். இது குறித்து அவர்கள் கூறும் போது மகளிர் சுய உதவிக்குழுவில் கடன் வாங்கி தருவதாக சிலர் கூறினர். இதை நம்பி பலர் லட்சக்கணக்கில் அவர்களிடம் பணம் கொடுத்தோம். ஆனால் அவர்கள் கடன் பெற்றுத்தரவில்லை. கொடுத்த பணத்தை கேட்டால் மிரட்டல் விடுக்கின்றனர். எனவே மகளிர் சுய உதவிக்குழு என்ற பெயரில் பணம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம் என்று கூறினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை அங்–கி–ருந்து அப்புறப்படுத்தினர்.