மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பெண்கள் விழிப்புணர்வு பைக் பேரணி
நாகர்கோவில் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பெண்கள் விழிப்புணர்வு பைக் பேரணி நடைபெற்றது.;
Update: 2024-03-09 06:32 GMT
விழிப்புணர்வு பைக் பேரணி
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நாகர்கோவிலில் நேற்று விழிப்புணர்வை ஊர்வலம் நடைபெற்றது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். நாகர்கோவில் ஆர்டிஓ காளீஸ்வரி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். நேர்முக உதவியாளர் சுப்பிரமணியன், மாவட்ட சமூக நல அதிகாரி சரோஜா, அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் ஜெரோலின் , சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மலர்வழி மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பெண்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை வரை ஊர்வலம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் நேற்று சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் சிவாலய ஓட்டம் நிகழ்ச்சி நடைபெற்றதால் தக்கலை வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் மற்றும் கலை குழு பெண்களின் சிலம்பாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.