ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றியகுழு தலைவர் உஷாராணி குமரேசன் தலைமையில் மகளிர் தினம் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.;
Update: 2024-03-10 06:58 GMT
மகளிர் தின கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மகளிர் தின விழாவை முன்னிட்டு ஒன்றியகுழு தலைவர் உஷாராணி குமரேசன் தலைமையில் உலகமெங்கும் போற்றப்படும் மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் ஒன்றிய குழு தலைவர் உஷாராணி குமரேசன் கேக் வெட்டி கொண்டாடினார்கள். இந்த நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர்கள் மட்டும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.