நீதிமன்ற வளாகத்தில் வைத்து மகளிர் தின விழா கொண்டாட்டம்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து மகளிர் தின விழா வெகுவிமர்சையாக கொண்டாட்டப்பட்டது.

Update: 2024-03-09 07:45 GMT

மகளிர் தின கொண்டாட்டம்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ராஜபாளையம் சாலையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது, இதில் பெண் வழக்கறிஞர்கள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

குறிப்பாக மியூசிக்கல் சேர், லெமன் இன் ஸ்பூன், மற்றும் பாட்டில் நீர் நிரப்புதல், பலூன் ஊதி உடைத்தல் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்று மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. மேலும் பணிபுரியும் வழக்கறிஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு தொடர்ந்து போட்டிகள் நடைபெற்றன. இறுதியில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News