திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் மாநகராட்சியில் பணிபுரியும் மகளிர் கேக் வெட்டி கொண்டாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Update: 2024-03-08 11:36 GMT
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் மாநகராட்சியில் பணிபுரியும் மகளிர் கேக் வெட்டி கொண்டாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சர்வதேச மகளிர் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பார்க் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் தின விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதில் மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் , அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் என பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் துணைமேயர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெண்களின் சிறப்புகளை பற்றி மாநகராட்சி மேயர் போற்றி பேசினார். இதனைத் தொடர்ந்து பணியாளர்கள் அனைவரும் ஒரு சேர கேக் வெட்டி  ஒருவருக்கொருவர் ஊட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  இதனை தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர்க்கு மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
Tags:    

Similar News