வீர வேலு நாச்சியார் சேனை சார்பில் மகளிர் தின விழா
திண்டுக்கல் மாவட்டம் முக்குலத்து தேவர் நல சங்கம் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் சேனை சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.;
Update: 2024-03-11 07:17 GMT
மகளிர் தின விழா
திண்டுக்கல் மாவட்டம் முக்குலத்து தேவர் நல சங்கம் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் சேனை சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு வேலு நாச்சியார் சேனை மாவட்ட செயலாளர் டாக்டர் வனிதா மணி தலைமை தாங்கினார்.இதில் முக்குலத்து தேவர் நல சங்கத்தின் மாவட்ட தலைவர் அழகர்சாமி, மாநகர் துணைச் செயலாளர் கண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.திண்டுக்கல் மாவட்ட வீரமங்கை வேலு நாச்சியார் சேனை சார்பாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு, பழங்கள் மற்றும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது. இதில் கவுரவத் தலைவர் உமாதேவி, பொருளாளர் மஞ்சுளா,துணைச் செயலாளர் கயல்விழி மற்றும் நிர்வாகிகள் கோமதி, வசந்தி,மலர்விழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.