பாமக வேட்பாளர் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும் என கட்சியினருக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2023-12-18 08:18 GMT

அன்புமணி ராமதாஸ் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாநகர் மாவட்ட பா.ம.க. சார்பில் வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அருள் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கதிர்.ராசரத்தினம் வரவேற்றார். மாநில வன்னியர் சங்க செயலாளர் மு.கார்த்தி, நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் குணசேகரன், மாநில துணைத்தலைவர் தேவதாஸ், பசுமை தாயகம் மாநில இணை செயலாளர் சத்ரியசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ம.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை வெற்றிபெற வைக்க அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். 2024 நாடாளுமன்ற தேர்தல் நமக்கு அரையிறுதி போட்டியாகும். அதற்கு அடுத்து வரும் 2026 சட்டமன்ற தேர்தல் இறுதிப்போட்டி மாதிரி. எனவே அதற்கு ஏற்றமாதிரி கட்சி நிர்வாகிகள் வீடு, வீடாக தின்னை பிரசாரம் செய்ய வேண்டும், என்றார். இக்கூட்டத்தில், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை அரசு நடத்த வேண்டும். மேலும், வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு 10.5 சதவீத சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி வழங்க வேண்டும். என்று பேசினார்.

Tags:    

Similar News