வேலை நிறுத்தம் - பள்ளிக்கு செல்லாமல் திரும்பிய மாணவர்கள்

சாத்தூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் பள்ளிக்குச் செல்லாமல் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் வீடு திரும்பினர்.;

Update: 2024-01-09 11:50 GMT

வீடு திரும்பிய மாணவ மாணவிகள் 

தமிழக முழுவதும் இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சாத்தூர் போக்குவரத்து பணிமனையில் இருந்து குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படும் சூழல் நிலவுகிறது. அதிலும் வெளியூர் ஓட்டுநர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் தகவல் தெரிய வருகிறது.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள N. சுப்பையாபுரம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் அருகிலுள்ள , முள்ளி சேவல், சின்ன ஓடைப்பட்டி, பெரியஓடைப்பட்டி, பெத்துரெட்டிப்பட்டி, சின்னத்தம்பிபுரம், உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் அரசு பேருந்தில் சென்று பயின்று வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில் இன்று அரசு பேருந்துகள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தால் குறைந்த அளவு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் சூழலில் இக்கிராமத்திற்கு வரும் அரசு பேருந்து வராததால் வழக்கம் போல பள்ளிக்கு கிளம்பிய மாணவ மாணவிகள் சாலையில் காத்திருந்து பேருந்து வராமல் ஏமாற்றத்தில் வீடு திரும்பிச் செல்கின்றனர். இதேபோன்று வேலைகளுக்குச் செல்லும் பெரியவர்களும் பேருந்துக்கு காத்திருந்து தனியார் பேருந்துகளில் காலதாமதமாக செல்கின்றனர். இந்த நிலை மேலும் நீடிக்குமா அல்லது இயல்பு நிலைக்கு திரும்பும் என்று சமூக ஆர்வலர்கள் தங்களது கேள்வியை முன்வைக்கின்றனர்.

Tags:    

Similar News