குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை

மருங்கூரில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-13 05:16 GMT
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம்  அருகே மருங்கூர் பகுதியை சேர்ந்தவர் சோபன் பிரபு (38) கொத்தனாராக வேலை செய்கிறார். இவருடைய மனைவி பிரியா. இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை.  இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.     நேற்று முன்தினம் ஷோபன் பிரபு மனைவியிடம் குழந்தை இல்லாதது  தொடர்பாக தகராறு செய்துவிட்டு, வெளியே சென்றுள்ளார். பின்னர் மனைவிக்கு செல்போன் மூலம் தான் விஷம் குடித்ததாக தெரிவித்துள்ளார்.      

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியா உடனே சம்பவ இடத்திலிருந்து கணவரை மீட்டு மயிலாடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கிருந்து பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பாளர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சோபன் பிரபு உயிரிழந்தார் இது குறித்த புகாரின் பேரில் அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.    குழந்தை இல்லாததால் சோபன் தற்கொலை செய்து கொண்டாரா?  வேறு ஏதாவது காரணம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News