கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி!

திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த அம்மா பாளையம்-ராக்கியாபாளையம் சாலையில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியானார். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2024-05-28 11:00 GMT

வழக்கு பதிவு

திருப்பூரில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி! சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 40).அவர் கடந்த 22-ந் தேதி திருப்பூர் திருமுருகன் பூண்டியை அடுத்த அம்மாபாளையம்- ராக்கியாபாளையம் சாலையில் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக முதல் மாடியிலிருந்து தவறி விழுந்த பழனிச்சாமி படுகாயம் அடைந்தார்.

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பழனிச்சாமி அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமுருகன் பூண்டி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News