குளித்தலை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

குளித்தலை அருகே வாழைத் தோட்டத்தில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.;

Update: 2024-01-27 13:27 GMT

உயிரிழந்த தொழிலாளி

  கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வீரகுமாரன் பட்டியை சேர்ந்தவர் மூக்கன் என்கிற மாரிமுத்து (42). இவர் கடந்த 25 ஆண்டுகளாக திம்மாச்சிபுரத்தில் உமாபதி என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியம் 2.30 மணியளவில் வாழைக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக அருகில் உள்ள சுரேஷ் என்பவரின் வாழை தோட்டத்தில் உள்ள மின்மோட்டார் பெட்டியில் கை வைத்தபோது, எதிர் எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

Advertisement

தண்ணீர் பாய்ச்ச சென்றவர், வெகுநேரமாகியும் வராததால், அங்கு வேலை செய்தவர்கள் சென்று பார்த்தபோது, அவர் இறந்த கிடந்ததை கண்டுள்ளனர். சம்பவம் குறித்து லாலாபேட்டை காவல் துறையினருக்கு அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்,

அவரது உடலை மீட்டு குளித்தலை அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது மனைவி மாலதி அளித்த புகாரின் பேரில் லாலாபேட்டை காவல்துறையினர் நேற்று இரவு 8 மணியளவில் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News