கட்டிடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம், திக்கணங்கோடு பகுதியில் சென்ட்ரிங் பலகையை பிரிக்கும் பணியின் போது தவறிவிழுந்த தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-03-31 07:24 GMT
தொழிலாளி பலி

கன்னியாகுமரி மாவட்டம், திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் மகன் அனீஸ் (27). இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு கட்டிட வேலைக்கு சென்று வந்தார். கடந்த 26 ஆம் தேதி குளச்சல் பகுதியில் உள்ள மைதீன் என்பவர் கட்டி வரும் வீட்டிற்கு அனீஸ் வேலைக்கு சென்றார். அங்கு சென்ட்ரிங் பலகையை பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது எதிர்பாராமல் அனீஸ் தவறி கீழே விழுந்தார்.

இதில் தலையில் மற்றும் வலது விலா பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்ட அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அனீஸ் உயிரிழந்தார். இது குறித்து அனீசின் தாயார் ரத்தினபாய் என்பவர் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News