திருப்பூரில் கல்லால் தாக்கப்பட்ட தொழிலாளி பலி

திருப்பூரில் கல்லால் தாக்கப்பட்ட தொழிலாளி பலியானது தொடர்ந்து கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.;

Update: 2024-05-21 12:26 GMT

காவல் நிலையம்

திருப்பூரில் கல்லால் தாக்கப்பட்ட தொழிலாளி பலி! திருப்பூர் வெங்கமேட்டை சேர்ந்தவர் பாண்டி (45). இவர் ரயில்வே கூட்செட்டில் மேலாளராக உள்ளார். இவரது உறவினருக்கு சொந்தமான எடைநிலையம் திருப்பூர் வளம் பாலம் ரோட்டில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக எடைநிலையம் செயல்படவில்லை.

அங்கிருந்து இரும்பு பொருட்கள் திருடுபோய் வந்தது. கடந்த 16 ம் தேதி இரவு எடைநிலையத்தில் மூன்று பேர் இரும்பு திருடுவதாக கிடைத்த தகவலின் பேரில் பாண்டி அங்கு சென்றார். அதில் ஒருவர் தப்பி சென்றார். சதீஷ் மற்றும் ஏழுமலை என்ற இருவரிடமும் பாண்டி விசாரித்துக் கொண்டிருந்தார்.

Advertisement

அப்போது தான் சிக்கிக் கொண்டதற்கு சதீஷ் தான் காரணம் என ஆவேசப்பட்ட ஏழுமலை கல்லால் தாக்கினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த சதீஷ் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து வடக்கு போலீசார் ஏழுமலையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த சதீஷ் இறந்தார். இதனால் கொலை வழக்கமாக மாற்றி போலீசார் விசாரிக்கின்றனர்...

Tags:    

Similar News