ஊழியர்கள் போராட்டம் : பல கோடி மதிப்பிலான ஏற்றுமதி பொருட்கள் தேக்கம்
திருவேற்காடு அருகே தனியார் ஏற்றுமதி நிறுவன ஊழியர்கள் போராட்டத்தால் பல கோடி மதிப்பிலான ஏற்றுமதி வர்த்தகம் தேக்கமடைந்துள்ளது.
திருவேற்காடு அடுத்த நூம்பல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பிரபல தனியார் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் வீட்டு உபயோக பொருட்கள், இறைச்சிகள், விலை உயர்ந்த மரங்கள், கிரானைட் கற்கள் கண்டெய்னர் மூலம் ஏற்றப்பட்டு சென்னை துறைமுகத்தில் கொண்டு சென்று கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இங்கு பணி புரியக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஊதிய உயர்வு, போனஸ், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடத்த மூன்று நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் துறைமுகத்திற்கு செல்ல வேண்டிய கண்டெய்னர் லாரிகள் செல்ல முடியாமல் ஊழியர்கள் சிறை பிடித்துள்ளதால் பல கோடி மதிப்பிலான பொருட்கள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது இதனால் கண்டெய்னர் மூலம் பொருட்களை அனுப்பிய நபர்களும், ஏற்றுமதி நிறுவனமும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் பேச்சு வார்த்தையில் உரிய உடன்பாடு எட்டப்படாத நிலையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய பல கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கமடைந்துள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி உரிய நேரத்தில் பொருட்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வில்லை என்றால் இந்திய ரூபாய் மதிப்பு இல்லாமல் வெளிநாட்டு ரூபாய் மதிப்பில் அபராதம் விழும் எனவும் பல கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கமடைந்துள்ளதால் ஏற்றுமதி தொழில் பாதிக்கப்படும் என புகார் தெரிவித்துள்ளனர் இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.