தூத்துக்குடியில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் பணி:பயிற்சி கூட்டம்

தூத்துக்குடி தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-04-09 08:44 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

தூத்துக்குடியில் பாராளுமன்ற தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், பதற்றமான மற்றும் கவனிக்கத்தக்க வகையில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சிக் கூட்டம் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News