வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் உலக தேனீக்கள் தினம்
வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் உலக தேனீக்கள் தினம் கொண்டாடப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள வேப்பங்குளம், தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் உலக தேனீக்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வை, இணை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் இரா.அருண்குமார், துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது தேனீக்களின் முக்கியத்துவம், தேனீக்களை வளர்க்கும் முறை, தேன் பெட்டிகளை பராமரிக்கும் முறைகள், மகரந்த சேர்க்கையில் தேனீக்களின் பங்கு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட தேன் தயாரிக்கும் முறைகள் போன்ற தலைப்புகளில் பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் என்.முத்துக்குமரன், எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியின், நிறைவாக நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் எம்.விஜயபிரியா நன்றி கூறினார். இதில், சுமார் 25 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பண்ணைத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.