இலஞ்சி கல்லூரியில் உலக புத்தக தின விழா
இலஞ்சி கல்லூரியில் உலக புத்தக தின விழா நடைபெற்றது.;
Update: 2024-04-24 06:05 GMT
உலக புத்தக தின விழா
தென்காசி மாவட்டம், இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் உலக புத்தக தின விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் ராஜகுமார் தலைமை தாங்கினார். முதல்வர் (பொ) தங்கம் முன்னிலை வகித்தார். நூலகர் முனைவர் ஏஞ்சலின் உலக புத்தகம் தினம் குறித்தும் வாழ்வின் உயர்நிலைக்கு செல்ல புத்தகத்தின் பலன்கள் குறித்தும் பேசினார். விழாவில் மாணவ ஆசிரியர்கள் கலந்து கொண்டு புத்தகங்கள் வாசிப்பில் ஈடுபட்டனர்.