திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா
திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா நடைபெற்றது.;
Update: 2024-04-26 05:31 GMT
உலக புத்தக தின விழா
திருவையாறு முழு நேர அரசு கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா நடைபெற்றது. வாசகர் வட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார். நூலகர் காமராஜ் முன்னிலை வகித்தார். போட்டி தேர்வு மாணவர்கள் .நிரஞ்சன் தியாகராஜன், ராஜேஸ்வரன், கண்ணன் பிரவீன்குமார், வசுந்தராதேவி ஆகியோர் தாங்கள் படித்து பயனடைந்த புத்தகங்கள் குறித்து பேசினர். தென்னக ரயில்வேயில் பணியாற்றி வரும் வேணுகோபால் நூலகத்திற்கு ரூ.1000 வழங்கி தன்னை நூலகபுரவலராக இணைத்துக்கொண்டார். விழாவில் உதவி நூலகர் சாமிநாதன், வாசகர் வட்டத்தினர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.