சேலம் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் உலக உணவு பாதுகாப்பு தினம்

சேலம் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் உலக உணவு பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

Update: 2024-07-01 12:16 GMT

உணவு பாதுகாப்பு தினம் கடைப்பிடிப்பு

சேலம் விநாயகா மிஷன் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் உலக உணவு பாதுகாப்பு தினம் கல்லூரி வளாகத்தில் கடைபிடிக்கப்பட்டது.

இதில் உணவு மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் அவசியம் குறித்தும், கலப்பட உணவுகள் மூலம் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் நோக்கில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதில் துறையின் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து பேசினார். சிறப்பு அழைப்பாளராக சேலம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கதிரவன் பங்கேற்று கலப்பட உணவை கண்டறியும் வழிமுறைகள், ஆரோக்கியமான உணவு பொருட்களை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து பேசினார்.

வீரபாண்டி தொகுதி உணவு பாதுகாப்பு அதிகாரி ஆரோக்கியபிரபு கலந்து கொண்டார். நிகழ்ச்சியையொட்டி மாணவர்களுக்கு அடுப்பில்லாத சத்தான உணவு தயாரித்தல் போட்டி நடத்தப்பட்டது.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை துறையின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசேகர் மற்றும் ஜமுனா, ஜெயபாலன் மற்றும் அல்போன்ஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News