அரசு பள்ளியில் உலக தாய்மொழி தினம் மற்றும் உ.வே.சா, தில்லையாடி வள்ளியம்மை பிறந்த நாள் விழா

குமாரபாளையம் அரசு பள்ளியில் உலக தாய்மொழி தினம் மற்றும் உ.வே.சா, தில்லையாடி வள்ளியம்மை  பிறந்த நாள் விழா  கோலாகலமாக நடந்தது.;

Update: 2024-02-23 02:49 GMT

உ.வே.சா, தில்லையாடி வள்ளியம்மை பிறந்த நாள் விழா

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக தாய்மொழி தினம் மற்றும் தமிழ் தாத்தா  உ.வே.சாமிநாதன்,  தில்லையாடி வள்ளியம்மை  பிறந்த நாள் விழா, விடியல் ஆரம்பம் சார்பில் அமைப்பாளர் பிரகாஷ், தலைமையாசிரியை செல்வி தலைமையில்  நடந்தது. உ.வே.சாமிநாதன்,  தில்லையாடி வள்ளியம்மை திருவுருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை, வினாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, புத்தங்கங்கள், சான்றிதழ்கள் பரிசாக வழங்கப்பட்டன. நிர்வாகிகள் சண்முகம், ஆசிரியர்கள்  குமார், முத்து, அருள், பார்வதி, சந்தானலட்சுமி, அம்சா, கீதா மாதேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News