உலக மக்கள் தொகை தினவிழா!

திருமயம் அருகே உள்ள மூங்கித் தாம்பட்டி மவுண்ட் ஆலிவ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் துறை சார்பில் உலக மக்கள் தொகை தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2024-07-03 04:41 GMT

உலக மக்கள் தொகை 

திருமயம் அருகே உள்ள மூங்கித் தாம்பட்டி மவுண்ட் ஆலிவ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் துறை சார்பில் உலக மக்கள் தொகை தின விழா, பட்டைய கணக்காளர் தினம், வகுப்பறை நூலகமாக மாறும் திட்ட தொடக்க விழா, மரக்கன்றுகள் நடும் விழா, வணிகவியல் மாணவர்கள் தயாரித்த "ரூபாயின் கதை" குறும்ப டம் வெளியீட்டு விழா ஆகிய ஐப்பெரும் விழாக்கள் நடந்தன. பள்ளி முதல்வர் அப்துல்லா தலைமை வகித்தார்.

தாளாளர் ஜெயபால் முன்னிலை வகித் தார். மாணவி மகாலட்சுமி வரவேற்றார். வணிகவி யல் துறை முதுகலை பட்டதாரி ஆசிரியர் மாணிக்கம் அறிமுக உரையாற்றினார். கடந்த ஆண்டு 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் வணிகவி யல் துறையில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களின் படங் களை வகுப்பறையில் இயக்குநர் ஜெய்சன் திறந்து வைத்தார். மாணவர் வள்ளியப்பன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News