உலக செஞ்சிலுவை தினம்
உலக செஞ்சிலுவை தினம் ரெட்கிராஸ் நிறுவனர் ஹென்றி டுனான்ட்டின் திருவுருவப்படத்திற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மலர் தூவி மரியாதை செய்தார்.;
Update: 2024-05-09 01:55 GMT
உலக செஞ்சிலுவை தினம் ரெட்கிராஸ் நிறுவனர் ஹென்றி டுனான்ட்டின் திருவுருவப்படத்திற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மலர் தூவி மரியாதை செய்தார்.
உலக செஞ்சிலுவை தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 8 ஆம் தேதி ரெட்கிராஸ் நிறுவனர் ஹென்றி டுனான்ட்டின் பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவரும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மதுரை மாவட்ட கிளை தலைவருமான சங்கீதா அவர்கள் தலைமையில் ரெட்கிராஸ் நிறுவனர் ஹென்றி டூனான்ட் அவர்களது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சிறுவர் சிறுமிகளுடன் கேக் வெட்டினார் அதனைத் தொடர்ந்து கோடை காலம் தொடங்கிய நிலையில் குடிநீர் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார் இந்நிகழ்வில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மதுரை மாவட்ட செயலாளர் ராஜ்குமார் மற்றும் மதுரையின் அட்சயப் பாத்திரம் நிறுவனர் நெல்லை பாலு மற்றும் தலைமை ஆசிரியர் தென்னவன் மற்றும் சமூக ஆர்வலர் அசோக் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.