நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி சார்பில் உலக ஈர நிலங்கள் தின விழா

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி சார்பில் உலக ஈர நிலங்கள் தின விழா நடைபெற்றது.;

Update: 2024-02-02 13:09 GMT


நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி சார்பில் உலக ஈர நிலங்கள் தின விழா நடைபெற்றது.


நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி சார்பில் உலக ஈர நிலங்கள் தின விழா நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி சார்பில் உலக ஈர நிலங்கள் தின விழா நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் துணி பைகளை வழங்கி, நீர் நிலைகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசினார். பசுமை மன்ற ஒருங்கிணைப்பாளர் வெஸ்லி, ஈர நிலங்கள் பல்லுயிர் பரவலை எவ்வாறு மேம்படுத்துகிறது எனவும் ஒவ்வொரு வீட்டிலும், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கு, மழை நீர் உதவும் வகையில், வீடு முழுவதுமாக கான்கிரீட் சிமெண்ட் தளம் அமைக்காமல், சிறிது காலியிடம் அமைத்து செடி கொடிகள் வளர்க்க அறிவுறுத்தினார்.

Advertisement

இந்நிகழ்ச்சியில் தாவரவியல் துறை மாணவ மாணவியர் மனித சங்கிலி அமைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். நிகழ்ச்சியில் வனத்துறை அலுவலர்கள் பெருமாள், செல்வம், சங்கர், நாமக்கல் மாவட்ட ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்கண்ணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி தாவரவியல் துறை பேராசிரியர்கள் பார்வதி, ராஜவேல் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News