தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சமூக ஆர்வலர்கள்.;
By : King 24x7 Website
Update: 2023-10-30 10:36 GMT
தேவர் சிலைக்கு மரியாதை
பசும்பொன் முத்துராமலிங்கத்வேகரின் 116வது தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் பாண்டியன் நகரில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு சமூக ஆர்வலர் கார்த்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது அதைத் தொடர்ந்து காந்திநகரில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், 300 நபர்களுக்கு அரிசி பையும் வழங்கினார்கள்.மேலும் இந்த நிகழ்வின்போது ஒருங்கிணைப்பாளர் பால் பாண்டி உடனிருந்தார்.