கீழாநெல்லி கோட்டை சாத்தைய்யனார் கோயிலில் யாக சாலை பூஜை தொடக்கம்!
கீழாநெல்லி கோட்டை சாத்தைய்யனார் கோயிலில் யாக சாலை பூஜை தொடங்கப்பட்டது.
Update: 2024-03-22 04:28 GMT
திருமயம் தாலுகா கீழாநெல்லி கோட்டையில் மாங்குடி கண்மாய் கரையில் பிரசித்தி பெற்ற பழமையான சாத்தைய்யனார் நறுவிழி அம்மாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகத்துக்காக கடந்த ஓராண்டாக திருப்பணிகள் நடந்து புதிதாக ராஜ கோபுரம் மண்டபம் சுற்றுச்சுவர் ஆகியவை கட்டப்பட்டுள்ளது. திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில் கும்பாபிஷேக விழா கடந்த 20ஆம் தேதி அணுக்கை விக்னேஸ்வரர் பூஜை உடன் தொடங்கியது. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் வேத மந்திரங்களை கூறி பூஜைகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தனபூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி ,பூர்ணா ஹுதி முதல் கால யாக பூஜைகள் நடந்தது. இரண்டு மற்றும் மூன்றாம் காலயாக பூஜைகள் திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இன்றும் நாளையும் தொடர்ந்து யாக சல பூஜைகள் நடக்கின்றன. 21 சிவாச்சாரியார்கள் பூஜைகளை நடத்தி வருகின்றன. 24ஆம் தேதி எட்டாம் கால யாக பூஜை நிறைவு பெற்றதும் காலை 9.30 மணிக்கு யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர் குடங்கள் சிவாச்சாரியார்களால் ஊர்வலமாக கோயிலை சுற்றி எடுத்து வரப்பட்டு கோபுர கலசத்தை அடைந்ததும் 10 மணிக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.