வந்தவாசி அருகே உலக நன்மை வேண்டி யாகம்
திருவண்ணாமலை மாவட்டம்,பெருமாள் கோயிலில் உலக நன்மைக்காக தன்வந்திரி யாகம் நடைப்பெற்றது.;
Update: 2024-02-01 10:54 GMT
உலக நன்மைக்காக யாகம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தில் உள்ள சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் உலக நன்மை வேண்டி தன்வந்திரி யாகம் நடந்தது. வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தில் சுந்தரவல்லி சமேத சுந்தர வரத ராஜ பெருமாள் கோயில் உள்ளது.
இந்த கோயிலில் பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழவும், அனைத்து செல்வங்களும் பெறவும், மாணவர்கள் கல்வி திறன் அதிகரிக்கவும், உலக பேரழிவிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டி உலக நன்மைக்கான தன்வந்திரி யாகம் கோவில் வளாகத்தில் நடந்தது. கோயில் பட்டாட்சியர் எம்.ராஜன் தலைமையில் நடந்த யாகத்தில் 10க்கும் மேற்பட்ட பட்டாட்சியர்கள் கலந்து கொண்டு யாகம் செய்தனர். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.