வலிப்பு நோயிலும் கடைமையை செய்த இளைஞர்
சிங்கம்புணரி சேர்ந்த சுதர்சன் வாக்குச்சாவடியில் திடீரென வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவனைக்கு செல்லும் முன் வாக்களித்து கடமையை நிறைவேற்றினார்.;

சிங்கம்புணரி சேர்ந்த சுதர்சன் வாக்குச்சாவடியில் திடீரென வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவனைக்கு செல்லும் முன் வாக்களித்து கடமையை நிறைவேற்றினார்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் மகன் சுதர்சன் (வயது 23). கூலித் தொழிலாளியான இவர், சிங்கம்புணரி பேரூராட்சி வாக்குச்சாவடி எண் 68 ல் வாக்குசெலுத்த வந்தார். அப்போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு வாக்குச்சாவடிக்குள்ளேயே மயங்கி விழுந்ததில் தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்தது.
இதை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் சொல்லி வரவழைத்தனர். மயக்கம் தெளிந்து எழுந்த சுதர்சன் தான் வாக்களித்துவிட்டு செல்கிறேன் என்று கூறியதை தொடர்ந்து அதிகாரிகள் அவரை வாக்களிக்க அனுமதித்தனர். அவர் வாக்களித்த பின்னர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்